மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏ, காவல்துறை அதிகாரி உட்பட 8 பேரின் மீது வழக்குப்பதிவு: இராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியைச் சார்ந்த பெண்மணி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பலாத்கார புகாரில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல் பலரும் சிக்கியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
காவல்துறையினர் பெண்மணி அளித்த புகாரின் பேரில் முன்னாள் எம்எல்ஏ மேவாராம் ஜெயின், அமைச்சர் கிரிதர் சிங் சோதா, காவல் அதிகாரிகள் ஆனந்த் சிங் ராஜ் புரோஹித், கங்காரம் காவா, தாவூத் கான் உட்பட எட்டு பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு பெண்மணியை முன்னாள் எம்எல்ஏ ஜெயினர் பலாத்காரம் செய்துள்ளார்.
தனது தந்தையின் உடல் நலக்குறைவுக்கு உதவி செய்யுமாறு சென்ற போது, அதனை சாதகமாக பயன்படுத்தி அத்துமீறல் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகளையும் இந்த கும்பல் வேட்டையாடி இருக்கிறது. இதுகுறித்து வெளியே கூறி புகாரளித்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு எம்எல்ஏ ஜெயினை அறிமுகம் செய்து வைத்த பலரும் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏவான மேவாராம் ஜெயின் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.