மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.. அதிர்ச்சி சம்பவம்.!
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஃபராக்கா என்ற இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை அவ்வழியாக சென்ற லாரி ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் அதே நேரத்தில் அதிவேகமாக வந்த ராதிகாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது லாரியின் மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் ரயிலின் பெட்டி ஒன்று சட்டென்று தீப்பிடித்து எறிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் லாரி மற்றும் தண்டவாளம் ஆகியவை பலத்த சேதமடைந்தன. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தை தொடர்ந்து சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.