ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பரபரப்பு.. ஐஸ்கிரீம் வாங்க சென்ற சிறுமி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு.. பக்கத்து வீட்டு சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த தந்தை கைது..!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் பேல்ஹார் கிராமத்தில் பசித்து வருபவர் 8 வயது சிறுமி. இவர் கடந்த வாரம் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக தனது தந்தையிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். இதனையடுத்து சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் பூட்டப்பட்ட காலியான அறையில் இருந்து பயங்கர நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன சிறுமி பெல்டால் கால்கள் கட்டப்பட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சிறுமி வசிக்கும் அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கும் சிறுவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி சிறுவனை தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கடைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை தனது வீட்டிற்கு இழுத்துச் சென்று கொலை செய்ததாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அந்த சிறுவன் நடந்தவற்றை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தந்தை அவரை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டு சிறுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் மறைத்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுவனின் தந்தை ஆகியோரை கைது செய்து போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.