திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல நடிகர் மர்ம மரணம்... காவல்துறை விசாரணை.!
மும்பையில் பிரபல மராத்திய நடிகர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மராத்திய நடிகர் ஆன ரவீந்திர மகாஜனி(74) மும்பையின் தலேகான் தபாதேவில் உள்ள பிளாட் ஒன்றில் கடந்த சில நாட்களாக வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தபோது இறந்த நிலையில் கடந்து இருக்கிறார் ரவீந்திர மகாஜனி. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவர் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இறப்பு பற்றிய தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கை பின்பு தான் தெரியவரும் எனவும் கூறி இருக்கின்றனர். அவரது இறப்பு தொடர்பாக மும்பையில் வசிக்கும் அவரது மகன் கஷ்மீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.