மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் பிரபல நடிகை!.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதுவரை 400 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஈடுகட்ட 2,500 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலிருந்தும் உதவிகள் வந்து கொண்டு இருக்கின்றன. பல பிரபலங்களும் கேரள மக்களுக்காக உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் மனவேதனையில் இருக்கிறார்கள். விரக்தியடைந்த சிலர் தற்கொலை முயற்சி எடுக்கும் சம்பவமும் நடந்துவருகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபல நடிகை மஞ்சுவாரியர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தற்கொலை முயற்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக்கொள்வது என்பது தீர்வாகாது. பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளியே வரவேண்டும். ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் போராட்ட குணம் இருக்கிறது. அதை வெளியே கொண்டுவர வேண்டும்.
நம்மிடம் இருந்த உடைமைகள் அனைத்துமே நம்மால் வாங்கப்பட்டவை. அவற்றை மீண்டும் சம்பாதிக்க முடியும். இந்த உலகம் உங்கள் பின்னால் நிற்கிறது. எல்லோரும் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.