கொடுத்துவைத்த மருமகன்..! அள்ளி அள்ளி சீர் கொடுத்த மாமனார்.! பார்க்கும்போதே தலை சுத்துது..!



father-in-law-gives-seer-for-son-in-law

தமிழகத்தில் புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்தில் ஆஷாதம் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா என்பவர் வித்தியாசமான சீர்களை கொடுத்து அசத்தியுள்ளார்.

Father in law

1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் கொடுத்து ஒட்டுமொத்த மக்களையும் வியக்கவைத்துள்ளார். இதுகுறித்து பலராமகிருஷ்ணா கூறுகையில், தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது. தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக்கொள்வதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீர்வரிசையை வழங்கியதாக தெரிவித்தார்.