மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாப்பிள்ளையின் உடையால் ஏற்பட்ட தகராறு! கல்வீசி களேபரமான திருமண வீடு! இறுதியில் நடந்தது என்ன??
மத்தியபிரதேச மாநிலம் தார் நகரில் வசித்து வருபவர் சுந்தர்லால். இவருக்கு தார் மாவட்டம் மெங்க்படா என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன்
நேற்று முன்தினம் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினர் மணமகளின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
திருமணத்திற்கான சடங்குகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முகூர்த்த நேரம் நெருங்கிய போது மணமக்கள் மணமேடைக்கு வருகை தந்துள்ளனர். அப்பொழுது மணமகனான சுந்தர் லால் ஷர்வானி உடையணிந்திருந்துள்ளார். அப்பொழுது மணமகள் குடும்பத்தினர் மாப்பிள்ளை தங்களது வழக்கப்படி திருமணத்தின் போது தோத்தி-குர்தா உடைதான் அணிய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு மணமகன் வீட்டார் ஒத்துக் கொள்ளாத நிலையில், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை உருவாகியுள்ளது. மேலும் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிகொண்டு கற்களை வீசி எறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இதுகுறித்து மாப்பிள்ளை கூறுகையில், மணமகன்- மணமகள் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்படவில்லை. திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்கள்தான் பிரச்சினையை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.