மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரியவகை டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்., காத்திருந்த அதிர்ச்சி!!
நன்னீர் டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் யமுனை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களது வலையில் நன்னீர் டால்பின் ஒன்று சிக்கி உள்ளது. இதனை மீனவர்கள் தோளில் தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த அரிய வகை டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐந்து பேர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற வருகிறது.