மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடு முழுவதும் மே 3 வரை விமான சேவை ரத்து.! விமான போக்குவரத்து துறை அறிவிப்பு.
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. எனவே இந்நோயை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் விமான, இரயில் மற்றும் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் முடிவடைவதாக இருந்த லாக்டவுனை பிரதமர் மோடி இன்று மீண்டும் நீட்டித்துள்ளார்.
அதன்படி ஊரடங்கானது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் விமான சேவை தொடரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியான பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு மே 3 ஆம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து
முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.