மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐபோன் ஆர்டர் செய்து ஆசையாக காத்திருந்தவருக்கு பேரதிர்ச்சி! அடக் கொடுமையே.. என்ன அனுப்பிருக்காங்க பார்த்தீங்களா! ஷாக் வீடியோ!
சமீபகாலமாக ஆன்லைனில் ஆடர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக தவறுதலாக வேறு பொருட்கள் அனுப்பப்படுவது அதிகமாகிவிட்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஏமாறும் நிலை ஏற்படுகிறது. அதிலும் தற்போது விழாக் காலம் என்பதால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் ஃபிளிப்கார்ட்டில் ரூ.52,990 மதிப்புள்ள ஐபோனை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு அண்மையில் பொருள் டெலிவரி செய்யப்பட்டது. இந்நிலையில் டெலிவரி பாய் முன்னிலையில் அந்த இளைஞர் மிகுந்த ஆசையுடன் வீடியோ எடுத்துக் கொண்டு அந்த பார்சலை திறந்துள்ளார்.
ஆனால் பார்சலில் ஐபோனுக்கு பதிலாக இரண்டே நிர்மா சோப்புகள் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் டெலிவரி பாயிடம் ஓடிபியை பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார். மேலும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் நீண்ட முயற்சிக்கு பிறகு ப்ளிப்கார்ட் தவறை ஒப்புக் கொண்டு அவருடைய ஆர்டரை கேன்சல் செய்து அவரது முழு பணத்தையும் திருப்பியளித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.