கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்! மத்திய அரசின் உதவியை நாடிய முதமைச்சர்..!!
டெல்லி உட்பட வட இந்தியா மாநிலங்களில் கன மழை கடந்த சில நாட்களாக மிரட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கடும் கனமழை காரணமாக டெல்லியில் பல பகுதிகள் வெள்ளம் நிறைந்தே காணப்படுகிறது. மேலும் உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக இதுவரை மக்கள் காணாத அதீத கன மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றல் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் யமுனை ஆற்றில் இருந்து வெள்ளம் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் வேலைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் உதவியை நாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “யமுனை ஆற்றில் 207.72 மீட்டராக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவை டெல்லிக்கு நல்ல செய்தி அல்ல. ஆகவே, தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்மட்டத்தை மேலும் உயர்த்தாத வகையில் போதிய நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்” என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.