மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழுதுகொண்டே தாலி கட்டிய மாப்பிள்ளை.! மிரளவைக்கும் காரணம்.! வைரல் வீடியோ.!
பிஹாரில் பெகுசராய் மாவட்டத்தில் சத்யம் குமார் என்பவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், ஹஸன்பூர் கிராமத்தை சேர்ந்த விஜய் சிங் என்பவர் சத்யம் குமாரை தொடர்புகொண்டு தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்குமாறும் கூறி அழைத்துள்ளார்.
இதனை நம்பி நம்பி சென்ற மருத்துவரை மூன்று நபர்கள் சேர்ந்து கடத்திச் சென்று தங்கள் வீட்டு உறவுக்கார பெண் ஒருவருக்கு தாலி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வேறு வழியில்லாத நிலையில், உயிருக்கு பயந்து அந்தப் பெண்ணுக்கு கால்நடை மருத்துவர் வேண்டா வெறுப்பாக அழுதுகொண்டே திருமணம் செய்துகொண்டார்.
बिहार की पकड़ौआ शादी!
— Utkarsh Singh (@UtkarshSingh_) June 14, 2022
बेगूसराय में वेटनरी डॉक्टर सत्यम झा के पिता ने अपने बेटे का अपहरण कर जबरन शादी कराने की शिकायत दर्ज कराई है, पुलिस जाँच में जुटी. pic.twitter.com/Zx1r3yq8JK
இதுகுறித்து அறிந்த மருத்துவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மணப்பெண்ணின் உறவினர்களை நேரில் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வசதியில்லாத பெண் வீட்டார், வசதியான இளைஞர்களை கடத்திச் சென்று மிரட்டி தங்கள் வீட்டு பெண்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் பிஹாரில் அடிக்கடி நடக்கின்றன.