பால் கொடுக்க மறுத்த எருமை மாடு.! காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த விவசாயி.! பின்னர் நடந்தது என்ன.?



formar complaint for buffalo not given given milk

மத்தியப் பிரதேச மாநிலம் நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால். விவசாயியான இவர் வீட்டில் எருமை மாடு ஒன்று வளர்த்து வந்துள்ளார். நாள்தோறும் நன்கு பால் கொடுத்துவந்த அந்த எருமை மாடு திடீரென கடந்த சில நாள்களாகப் பால் கறக்க பாபுலாலை அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் மாட்டுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாக எண்ணிய பாபுலால், அவரது எருமை மாட்டை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரைக் கேட்டு வியப்படைந்த போலீசார், அவரிடம் மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து பாபுலால் தனது எருமை மாட்டை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் மாடு பழையபடி பால் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த பாபுலால் காவல் நிலையத்துக்கு வந்து, மாடு பால் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக கூறி போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.