மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ப செய்தி... இந்தியாவில் 4 ஆவது கொரோனா அலை பரவாது... மக்களே கொண்டாடுங்கள்.!
உலகளவிலும், இந்திய அளவிலும் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 4 ஆவது கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலைத்தாக்கம் விடைபெறத்தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் காரணமாக இந்தியாவில் அதிகளவு உயிரிழப்பு இல்லை என்பதால் மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா நான்காம் அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி அக். 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என கான்பூர் ஐ.ஐ.டி ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸின் 4 ஆவது அலைபரவல் ஏற்படாது என நச்சுயிரியல் நிபுணர் மருத்துவர் டி.ஜேக்கப் தெரிவித்துள்ளார். இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நச்சுயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். நான்காம் பரவல் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் இந்தியா மீண்டும் உள்ளூர் தொற்று என்ற நிலைக்குள் நுழைந்து இருக்கலாம். இந்த நிலை என்பது 4 வாரத்திற்கு இருக்கும். 4 வாரங்கள் கழித்துதான் இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் பரவும். இதுதான் எனது நம்பிக்கை. ஏனெனில், எதிர்பாராத மாறுபாடு ஏற்படாத கொரோனாவால், 4 ஆவது அலையை ஏற்படுத்த இயலாது.
இந்திய அளவில் கிடைக்கும் தகவல், வைரஸ் மாறுபாடு, உலகளவில் கிடைக்கும் தகவல் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தால் 4 ஆவது அலை ஏற்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கலாம். கடந்த காலத்தில் பரவிய இன்ப்ளூயன்சா 2 மற்றும் 3 அலைகளுக்கு பின்னர் ஓய்ந்துபோனது. கொரோனா வைரஸில் பிறழ்வுகள் இருக்கும். அதுவே அதன் பரவலில் சறுக்கலை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.