பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! தலைகீழாக மாறிய வாழ்க்கை.!



From beggar to shop owner today

வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இவைகள் மட்டும் இருந்தாலே போதும் என்பதை உண்மையாக்கும் வகையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் தற்போது பலரும் வியக்கும் வகையில் முன்னேறியுள்ளார்.

பாட்னாவில் வசித்து வரும் ஜோதி என்ற சிறுமி தனது சிறு வயதில் இருந்தே ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் அவரோடு ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் தாய் இடத்தில் இருந்து ஜோதியை வளர்த்து வந்தார். ஒருகட்டத்தில் அவரை வளர்த்து வந்த பெண்ணும் ஒருநாள் உயிரிழந்தார்.

இந்திநிலையில், பாட்னாவை சேர்ந்த ராம்பே பவுண்டேஷன் என்ற பிரபல நிறுவனம் ஒன்று அனாதையாக இருந்த ஜோதியை தத்தெடுத்து படிக்க வைத்தது. ஜோதி தனது படிப்பை முடித்த நிலையில், பெயிண்டிங் கலையையும் கற்றுக்கொண்டார். தற்போது தொழில் செய்வதற்கு ஆசைப்பட்ட ஜோதி ஒரு கஃபேடெரியாவை தொடங்கி காலை முதல் இரவு வரை இவரே வியாபாரத்தை பார்க்கிறார். மேலும், இடையில் அவருக்கு கிடைக்கும் நேர்தத்தில் தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இவரது வாழ்க்கை தற்போது பலருக்கு பாடமாக அமைந்துள்ளது.