மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சகோதரிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மகன் உட்பட 4 பேர் மீது வழக்கு.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு சகோதரிகள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியின் மகன் உட்பட நான்கு பேர் மீது உனக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தாதியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது சகோதரியான சிறுமி ஆகியோர் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் அந்த சிறுமியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் மகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரை கைது செய்து இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். உறவினர்கள் அந்த இளம் பெண்ணை மீட்டு ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.