கர்நாடக உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக இளம்பெண் காயத்ரி தேர்வு... குவியும் பாராட்டுக்கள்...!!



Gayatri, a young woman, has been selected as a civil judge of the Karnataka High Court.

கர்நாடக உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக இளம் பெண் காயத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற சிவில் நீதிபதிகள் பதவிக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி, வெங்கடலட்சுமி தம்பதியினரின் மகள் என்.காயத்திரி (25) கலந்துகொண்டார். 

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி மகள் காயத்திரி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் காயத்ரி உயர் நீதிமன்ற சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். 

உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக இளம் வயதிலேயே தேர்வாகியுள்ள காயத்திரி, பங்காருபேட்டை அருகே காரஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் சட்டப்படிப்பை கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தராய்யா சட்டக்கல்லூரியில் முடித்தார். 

காயத்ரி பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தில் வந்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி இருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.