மீன், கோழி, மருத்துவ கழிவுகளுடன் தமிழகம் வந்த கேரள லாரி.. அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.!



in Kanyakumari NTK Party Members Capture Lorry with Waste 

 

ஜம்மு காஷ்மீரில் இருந்தால், இந்தியாவின் கடைக்கோடி நகரமும், தொடக்கமுமான கன்னியாகுமரி மாவட்டம், சுற்றுலாவுக்கும், இயற்கை எழிலுக்கும் பெயர்போன மாவட்டம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிருக்கும் மலைகள் பெயர்த்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் எல்லை வழியாக கொண்டு வரப்பட்டு, தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுகின்றன.

தொடர்கதையாகும் புகார்

இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் அவ்வப்போது விசாரணை நடத்தி, கழிவுகளை தமிழக பகுதிகளுக்குள் கொட்டும் அல்லது கொட்ட வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இந்த செயல்கள் தொடருகின்றன. 

இதையும் படிங்க: கௌரவ கொலை வழக்கு... தந்தை, தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.!! இளம் பெண்ணுக்கு கிடைத்த நீதி.!!

3 வாகனங்கள் சிறைபிடிப்பு & காவலர்கள் வசம் ஒப்படைப்பு

இந்நிலையில், நேற்று கேரளாவிலிருந்து வந்த லாரி ஒன்றில், கோழி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையினர் வசம் ஒப்படைத்து வருகின்றனர். நேற்று மொத்தமாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இதையும் படிங்க: "வா நாம கல்யாணம் கட்டிக்கலாம்.." சிறுமியை கடத்திய வட மாநில தொழிலாளி.!! செக் வைத்த போலீஸ்.!!