#Breaking: "ஈடு செய்யவே இயலாத துயரம்" - தவெக தொண்டர்கள் 6 பேர் மறைவு; நடிகர் விஜய் இரங்கல்.! 



TVK Vijay Regret on TVK Party Supporters 6 Died an Accident on 27 Oct 2024 

கழகத் தோழர்கள் மறைவுக்கு,  தவெக தலைமை இரங்கல் தெரிவித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொள்கை அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை, கோட்பாடு எதிரிகளாக பிளவுவாத அரசியல், ஊழல் போன்றவற்றை எதிர்த்து, திமுக, பாஜகவை மறைமுகமாக நகையாடி இருந்தார். 

எதிர்ப்புக்கருத்துகள்

மேலும், திராவிட அரசியல் எனும் பிம்பத்தையும் தாக்கி பேசி இருந்தார். விஜயின் பேச்சு முடிந்ததுமே திமுகவில் இருந்து நேரடி / மறைமுக எதிர்ப்புக்கருத்துகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அரசியல்  ரீதியான விமர்சனத்தை விஜய் மற்றும் அவரின் தொண்டர்கள் எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர். இதனிடையே, மாநாட்டில் கலந்துகொள்ள வந்த 6 தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!

இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு.  கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை, 
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார், 
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை 

TVK Vijay

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "நேற்று வந்தவர்களை பற்றி கவலை வேண்டாம்" - தவெக குறித்து முக ஸ்டாலின் சூசகம்?..!