மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பஸ் டிரைவரின் சட்டையை பிடித்து, தாறுமாறாக வெளுத்து வாங்கிய ராங்ரூட் பெண்! நடந்தது என்ன? அதிரவைக்கும் ஷாக் வீடியோ!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், போக்குவரத்து விதிகளை மீறி தவறான வழியில் வந்த பெண் ஒருவர், தன் பைக் மீது லேசாக உரசிய அரசுப் பேருந்து ஓட்டுநரை சட்டையை பிடித்து, மோசமாக பேசி தாக்கிய வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் பென்ஸ் சர்க்கிள் பகுதியில் இருந்து விஜயவாடா நோக்கி நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த பேருந்திற்கு எதிரே விதிமுறைகளை மீறி தவறான வழியில் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்பொழுது அரசு பேருந்து அந்த ஸ்கூட்டியின் மீது லேசாக மோதியுள்ளது.
இந்த நிலையில் கொந்தளித்துப் போன அந்தப் பெண் ஸ்கூட்டியை நிறுத்தி, ஆவேசமாக பஸ்ஸில் ஏறி டிரைவரை மோசமாக, தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் டிரைவரின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பஸ்ஸின் உள்ளே இருப்பவர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும் அவர் கேட்கவில்லை.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், போக்குவரத்து விதிகளை மீறி தவறான வழியில் வந்த பெண், தன் பைக் மீது லேசாக உரசிய அரசுப் பேருந்து ஓட்டுநரை, வார்த்தைகளால் வசைபாடி தாக்கிய வீடியோ வைரல்!#AndhraPradesh #Vijayawada #Accident pic.twitter.com/tcond0qyYP
— Lankasri FM (@lankasri_fm) February 13, 2022
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். ஆனால் அப்பொழுதும் அவர் அமைதியாகவில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.