மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்துட்டாங்களே... காதலர்களின் வருகையால் அதிர்ச்சியாகி காதலி எடுத்த முடிவு!!
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள அமினோர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதலில் ஒரு ஆண் நபரை காதலித்து வந்துள்ளார். இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை பிரேக் அப் செய்துள்ளார். பின்னர் இரண்டாவதாக ஒரு நபரை காதலித்து உள்ளார்.
இது இளம்பெண்ணின் முதல் காதலனுக்கு தெரிய வரவே கோபமான அவர் இரண்டாவது காதலனிடம் சென்று தன்னை பற்றியும் இளம்பெண் தன்னிடம் பழகியது பற்றியும் கூறியுள்ளார். இருவரில் யாரை உண்மையாக காதலிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள இருவரும் இளம்பெண்ணின் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து கொண்டு ஆயுதத்துடன் வந்துள்ளனர்.
இளம்பெண்ணை பார்த்து யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்து காதலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுக்கவே போலீசார் இரண்டு காதலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.