மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை சீரழித்து, வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய காம காதலன்.. 6 அரக்கர்களின் பதறவைக்கும் செயல்.!
தங்கையின் தோழியை திட்டமிட்டு பலாத்காரம் செய்த அண்ணன் மற்றும் அவரை மிரட்டிய அண்ணனின் தோழர்கள் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 15 வயதுடைய ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சிறுமியுடன் படிக்கும் வகுப்பு தோழி இவர் வசிக்கும் அதே பகுதியில் இருப்பதால், அவரை பார்ப்பதற்காக அடிக்கடி தோழியின் வீட்டிற்கு சென்று வருவார். அப்போது இவரது தோழியின் சகோதரன் அவரை பார்த்து, எப்படியாவது அடையவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக சரியான நேரம் வரும் வரை காத்திருந்த நிலையில், சிறுமி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது தோழியை பார்க்க சென்றபோது, அவரது தோழி வெளியே சென்றிருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திய தோழியின் அண்ணன் திட்டமிட்டபடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை ரகசியமாக வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்த நண்பர்களும் அந்த சிறுமியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுமியை தொடர்பு கொண்டு, 'தங்களுடன் தினமும் நீ உல்லாசத்திற்கு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இந்த வீடியோவை நாங்கள் சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவோம்' என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்ட தாயார் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தோழியின் அண்ணன் மற்றும் அவரின் நண்பர்கள் என ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.