மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமி பலாத்காரம்.. புகார் அளித்ததால் தாக்குதல்.. காமுக கூட்டம் வெறிச்செயல்.!
மூன்று மாதமாக 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் மீது புகார் அளித்த சிறுமியை தாக்கிய வாலிபர் மற்றும் அவருடன் சேர்ந்து 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 14 வயதுடைய சிறுமி தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். அவரது பக்கத்து வீட்டில் 20 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த வாலிபர் மூன்று மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்ற கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார்.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட சிறுமி இனியும் பொறுக்க முடியாது என எண்ணி, அந்த கொடூரன் செய்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வாலிபரின் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தன் மீது சிறுமி புகார் கொடுத்த ஆத்திரத்தில் இருந்த வாலிபர் , தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த விஷயம் தெடர்பாக காவல்துறையினருக்கு தெரிய வர, சிறுமியின் குடும்பத்தாரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், எஞ்சியுள்ளவர்களை பிடிப்பதற்காக வலை வீசப்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.