#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிகாலை 4 மணிக்கு மகள் அம்மாவுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்..! தலைசுற்றி நின்ற தாய்..! என்ன கொடுமை சார் இது.!
அதிகாலை 4 மணிக்கு கண்விழித்த மகள் தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை தனது சகோதரி சாப்பிட்டுவிடுவார் என்ற அச்சத்தில் அதை தடுப்பதற்காக மகள் ஒருவர் நான்கு மணிக்கு தனது அம்மாவிற்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில், "அம்மா நான் தற்செயலாக எழுந்து விட்டேன். இப்போது காலை 4 மணி. நான் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள் மறுநாள் காலை எப்போது எழுவேன் என எனக்கு தெரியவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பியூ (சகோதரி) எனக்கு முன்பாகவே எழுந்து குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பீட்சா துண்டுகளை சாப்பிட்டு விடுவார்.
ஃப்ரிட்ஜில் இருக்கும் மூன்று துண்டுகளை சாப்பிட வேண்டாம், அவர் சாப்பிட தொடங்குவதற்கு முன் அவளிடம் என் அனுமதியை பெற சொல்லுங்கள். நீங்கள் என் அம்மாவாக இருந்தால், நீங்கள் எப்போதாவது என்னை நேசித்து இருந்தால், நீங்கள் என்னை அன்பாக தான் பெற்றீர்கள் என்றால், என் மனநிலையை அறிந்து நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அம்மா குட் நைட் " என்று அந்த பதிவில் மகள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை மறுநாள் காலை 10 மணிக்கு பார்த்த அவரது தாய் என்ன சொல்வது என்று தெரியாமல் "ஏய் பகவான்" என தனது ரியாக்சனை கொடுத்துள்ளார். 3 பீட்சா துண்டுகளை தனது சகோதரி சாப்பிட்டுவிடுவார் என்ற அச்சத்தில் மகள் செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
Describe the relationship you share with your mother in one paragraph pic.twitter.com/bqgLEhID9D
— one hit wonder (@ishaforreals) September 7, 2020