மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேக்கப் செய்த காதலியை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
கோவா மாநிலத்தில் உள்ள போர்வோரிம் பகுதியை சேர்ந்தவர் பாகிர் என்ற பிரகாஷ் சங்சவாட் (வயது 22). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பிரகாஷின் நடவடிக்கை சரியில்லாததால் பெண்மணி காதலரிடம் பேசுவதை தவிர்த்து விலகி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலர், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தனது நண்பரான காமாக்ஷி சங்கர் உத்தாபினோவ் (வயது 30) என்பவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பெண்மணி காவல் நிலையத்தில் புகாராவும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பிரகாஷ் தனது காதலியிடம் இறுதியாக பேசவேண்டும் என அழைத்து, நண்பருடன் சேர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். பின், அவரின் உடலை 80 கி.மீ தூரம் உள்ள மகாராஷ்டிரா மாநில எல்லைப்பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில், குற்றவாளிகள் உடலை அண்டை மாநில எல்லைக்குள் போட்டு வந்ததால், சடலம் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.