#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8 கால்கள், இரண்டு இடுப்புடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!! ஆனால் பிறந்த சில நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி!!
மேற்கு வங்கத்தில் இரண்டு இடுப்பு, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேற்கு வங்கத்தில் வடக்கு (பர்கானாஸ் பங்கானில் நேற்று (ஜூலை 16) எட்டு கால்கள் மற்றும் இரண்டு இடுப்புகளைக் கொண்ட ஒரு ஆடு பிறந்தது. பங்கானில் உள்ள கல்மேகா பகுதியில் பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க உள்ளூர்வாசிகள் திரண்டனர்.
சரஸ்வதி மொண்டால் என்பவர் வீட்டில் வளர்த்துவந்த ஆடுகளில் ஒன்று இரண்டு குட்டிகளை பெற்றெடுத்தது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் எட்டு கால்கள் மற்றும் இரண்டு இடுப்புகளுடன் பிறந்தது, மற்றொன்று சாதாரண ஆட்டுக்குட்டியாக பிறந்தது. ஆனால் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி சில நிமிடங்களில் உயிரிழந்தது.
இதுகுறித்து பேசியுள்ள சரஸ்வதி மொண்டால், தமது ஆடுகள் இதற்கு முன்பு இப்படி குட்டிகளை ஈன்றது இல்லை எனவும், இதுவே முதல் முறை எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த 5 நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும் சரஸ்வதி மொண்டால் கூறியுள்ளார்.