மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகிழ்ச்சி செய்தி... குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. இன்றைய ரிப்போர்ட்.!
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று அதிகரித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் 50,407 ஆக இருந்த நிலையில் இன்று 44,877 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 5,500 குறைவு.கொரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 4,26,31,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 804 ஆக இருந்த நிலையில் இன்று 684 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 5,08,665 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து கடந்த ஒரே நாளில் 1,17,591 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,15,85,711 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 1,72,81,49,447 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.