அடேங்கப்பா! நம்ம கூகுள் சுந்தர் பிச்சையின் சம்பளம் இவ்வளவா? விவரம் தெரிஞ்சா நீங்களே தலைசுற்றி போயிருவீங்க!



goole-ceo-sundar-pichai-salary-detail

தற்போதைய காலகட்டத்தில் அனைவராலும் பெருமளவில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வலைத்தளங்களுள் ஒன்று கூகுள். இத்தகைய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தை சேர்ந்த அவர் கடந்த 3ம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயலதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆல்பாபெட் நிறுவனம் தற்போது சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் நிறுவனம் ஆண்டுக்கு  சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.22 கோடி ஊதியமாக வழங்கப்படஉள்ளது.

google

மேலும் அதுமட்டுமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவருக்கு நிறுவனத்தின் பங்காக 150 மில்லியன் டாலரும், அவருக்கு வரையறுக்கப்பட்ட இலக்கை அடைவது பொறுத்து 90 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.707 கோடி ரூபாய் சுந்தர் பிச்சைக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.