#JustIN: கோதாவரி அதிவிரைவு இரயில் தடம் புரண்டு விபத்து.. அச்சத்தில் உறைந்துபோன பயணிகள்..!



Gothavari express train accident

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகபட்டினத்தையும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரையும் இணைக்கும் வகையில் கோதாவரி அதிவிரைவு இரயில் சேவை வழங்கப்படுகிறது. 

இன்று விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் கிளம்பிய 12727 அதிவிரைவு இரயில், ஹைதராபாத் நகருக்கு முன்பு பிபிநகர் - கட்கெஸ்வர் இரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. 

இரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்திற்குள்ளாகவே, குறைந்த வேகத்தில் இரயில் பயணம் செய்ததால் எவ்வித பெரிய அசம்பாவிதமும் ஏற்படவில்லை. காயங்களும் இல்லை.

தடம்புரளாத இரயில் பெட்டிகளை பிரித்து மேற்படி இரயில் பயணிகளுடன் இயக்கப்படுகிறது. இரயில் தடம்புரண்டது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழித்தடத்தில் வரும் இரயில்கள் இரத்து செய்யப்பட்டு, விரைவு இரயில்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.