மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடைமேடையில் காத்திருந்த பயணிகள் மீது அரசு பேருந்து மோதி விபத்து... 3 பேர் உயிரிழப்பு!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் அரங்கேறியுள்ளது. இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பேருந்து நிலைய டிப்போ மேலாளர் கூறுகையில் பேருந்தினை டிரைவர் ரிவர்ஸ் கியருக்கு பதிலாக தவறுதலாக தவறான கியரை இயக்கியதால், பயணிகள் காத்திருந்த நடைமேடையில் ஏறி அங்கிருந்த பயணிகள் மீது மோதியதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.