ஏரோப்பிளேன் ஏறிய சீட்டாஸ்: 8 சிறுத்தைகளையும் பூங்காக்களில் அடைக்க நடவடிகை..!



Government of Namibia has given 8 Cheetahs to India

இந்தியாவில், காடுகள் அழிப்பு, விலங்குகள் வேட்டை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் மீண்டும் இந்த சிறுத்தை இனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடான நமீபியா-வில் இருந்து சிறுத்தைகள் பெறுவது குறித்ட்து அந்த அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி 8 ‘சீட்டா’ ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபிய அரசு வழங்கியுள்ளது. இவற்றில்  5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கும்.

இந்த 8 சிறுத்தைகளும் சரக்கு விமானம் மூலம் நமீபியாவில் இருந்து நேற்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டது. ஜெய்ப்பூருக்கு வந்துள்ள இந்த சிறுத்தைகள் பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேச மாநிலம் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் விடுவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.