மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.! நீர்தேக்கத்திற்குள் விழுந்த காஸ்ட்லி செல்போன்.! எடுப்பதற்காக அரசு அதிகாரி செய்த அதிர்ச்சி காரியம்!!
சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர், அணையில் விழுந்த தனது விலையுயர்ந்த செல்போனை எடுப்பதற்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ராஜேஷ் விஸ்வாஸ். அவர் அண்மையில் விடுமுறை எடுத்து கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு அவர் தனது ஸ்மார்ட் போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது ராஜேஷின் ஒரு லட்சம் மதிப்புமிக்க ஸ்மார்ட் போன் நீர் தேக்கத்திற்குள் விழுந்துள்ளது.
உடனே பதறிப்போன அவர் உள்ளூர்காரர்களை அழைத்து செல்போனை தேடித் தரக் கூறியுள்ளார். ஆனால் அவர்களால் செல்போனை கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை. உடனே அவர் இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து அதனை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஓட வைத்து சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அங்கிருந்து வெளியேற்றி வீணாக்கியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நீர் மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ராஜேஷை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்த உத்தரவிடபட்டது. அரசு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் செய்த இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.