திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 வயது பேரனை காப்பற்ற முயன்ற பாட்டிக்கு நடந்த விபரீதம்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!
70 வயது பாட்டி ஒருவர் தனது நான்கு வயது பேரனை மாட்டிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70 வயதுடைய பாட்டி ஒருவர் தனது 4 வயது பேரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியில் வந்த மாடு ஓன்று அந்த பாட்டியின் பேரனை முட்ட முயற்சிக்கிறது. அந்த மாட்டிடம் இருந்து தனது பேரனை காப்பாற்ற அந்த பாட்டி போராடுகிறார். ஒருகட்டத்தில் அந்த பாட்டியையும், பேரனையும் முட்டி கீழே தள்ளிய மாட்டு இருவரையும் மாறி மாறி தாக்குகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை அந்த மாடு மேலும் தாக்குகிறது. இதனால் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய பாட்டியை அக்கம் பக்கத்தினர் மாட்டிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அங்கிருந்த CCTV கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதோ அந்த காட்சி.