எல்லாம் பழசு.! திருமணத்தன்று மாப்பிள்ளை செய்த காரியம்.! அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார்.! என்ன நடந்தது??



Groom cancels marriage for giving old furniture as dowry

திருமணத்தின் போது வரதட்சணையாக மணமகள் வீட்டார் தனக்கு பழைய பர்னிச்சர்களை கொடுத்ததாக கூறி மாப்பிள்ளை குடும்பத்தினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த நிலையில் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய காலம் முதல் தற்போது வரை திருமணம் என்றாலே சில மாப்பிள்ளைகள் வரதட்சணை என்ற பெயரில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டு வசதியாக இருந்து வருகின்றனர். வரதட்சணை தடைச்சட்டம் இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மேலும் இந்த வரதட்சணை கொடுமையால் பல தற்கொலைகள் அரங்கேறியுள்ளது. மேலும் திருமணங்களும் நின்று போயுள்ளன. 

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திருமணத்தன்று வரதட்சணையால் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து திருமணம் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் இதுகுறித்து மாப்பிள்ளை குடும்பத்தினரும் கேட்ட நிலையில். அவர்கள் நீங்கள் வரதட்சணையாக ஏற்கனவே பயன்படுத்திய பழைய பர்னிச்சர் பொருட்களை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து மணமகளின் தந்தை போலீசில் அளித்துள்ளார். அதில் அவர் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பொருட்களை தாங்கள் தரவில்லை, பழைய பொருட்களை கொடுத்துள்ளீர்கள் என குற்றம் சாட்டி திருமணத்தன்று மாப்பிள்ளை வரவில்லை. மேலும் இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது என்னை தகாத முறையில் நடத்தினர் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வரதட்சணை தடைசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.