நவராத்திரி கொண்டாட்டங்களில் இளம் வயதினர் மாரடைப்பால் திடீர் மரணம்; குஜராத்தில் 10 பேர் பலி., திணறும் சுகாதாரத்துறை.!



gujarat-navratri-festival-celebration-heart-attack-deat

 

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழாக்கள் தற்போது கலை கட்டி இருக்கின்றன. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் நவராத்திரி திருவிழாவை, வடமாநிலங்களில் கர்பா உட்பட பிராந்திய நடனத்துடன் உற்சாகமாக கொண்டாடுவார்கள். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநில அளவில் 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். 

நவராத்திரி கொண்டாட்டத்தில் ஈடுபட்டோர் அம்மாநிலத்தில் மாரடைப்பால் பலியாகுவது தொடரும் நிலையில், குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரிஷிகேஷ் பட்டேல் உரிய நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கும் அறிவுறுத்தி இருக்கிறார். 

12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர், 28 வயதுடைய நபர், 31 வயது 46, 47 வயதுடையவர்கள் என இளம் தலைமுறை அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும், மாரடைப்பு தொடர்பாக அவசர அழைப்புக்கு 750 அழைப்புகளும் ஒரு வாரத்தில் மட்டுமே பெறப்பட்டுள்ளன. 

வழக்கமாக சாதாரண நாட்களில் மொத்தமாக 670 அழைப்புகள் வெவ்வேறு உடல் நலக் கோளாறுகள் காரணமாக அவசர அழைப்புகளுக்கு பெறப்படும் நிலையில், தற்போது மாரடைப்பு மட்டும் அதிகளவு அழைப்புகள் பெறப்படுகின்றன.

இந்த திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் தெரியாமல் குஜராத் மாநில சுகாதாரத்துறை விழிபிதுங்கி வருகிறது. மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறும், கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகே அவசர ஊர்திகளை நிறுத்தி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.