53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஓட்டுனருக்கு திடீர் மயக்கம்.. ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.. 4 பேர் பரிதாப பலி.!
குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா, உதய்பூர் பகுதியில் இருந்து, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூருக்கு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் சந்த்பூர் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்தது.
அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
பேருந்து ஓட்டுனருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.