தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்.. முக்கிய குற்றவாளி பிலால் இஸ்மாயில் மரணம்.!
கோத்ரா இரயில் எரிப்பு, வன்முறை விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 11 பேரில் ஒருவரான பிலால் இஸ்மாயில் அப்துல் மஜீத், வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் வதோதரா மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் பிலால் இஸ்மாயில் அப்துல் மஜித் (வயது 61). இவர் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கோத்ரா இரயில் படுகொலை சம்பவத்தில், 11 குற்றவாளிகளில் ஒருவர் ஆவார்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் இந்தியாவையே 2002 ஆம் வருடங்களில் பெருமளவு உலுக்கியது. சபர்மதி அதிவிரைவு வண்டியின் S6 பெட்டி தீக்கு இரையாக்கப்பட்டு, 59 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 1000 சிறுபான்மை சமூக மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 2010 ஆம் வருடம் பிலால் இஸ்மாயில் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த அக். 2017 ஆம் வருடம் குஜராத் உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. வதோதரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இஸ்மாயிலுக்கு கடந்த 4 வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இஸ்மாயில் மரணமடைந்ததாக காவல் உதவி ஆணையர் ஏ.வி ராஜ்கோர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இன்று வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இஸ்மாயிலின் நிலைமை கடந்த சில நாட்களாக மோசமான காரணத்தால், வதோதராவில் இருக்கும் எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இறுதியில், சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்துள்ளது. இன்று மக்களுக்கு தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.