மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெற்றியை கொண்டாடிய ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு! தொண்டர் பரிதாப பலி!
டெல்லியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மெஹ்ராலி என்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மெஹ்ராலி என்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார்.
Delhi: Shots fired at Aam Aadmi Party (AAP) Mehrauli MLA Naresh Yadav's convoy while he was coming back from temple. One party volunteer lost his life while another has been injured in the incident. pic.twitter.com/QdpM5wPfQt
— ANI (@ANI) February 11, 2020
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
டெல்லி முழுவதும் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.