மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடிய குற்றத்திற்காக சிறுவர்களை அரை நிர்வாணமாக; ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்....!
அரியானாவில் திருடிய குற்றத்திற்காக, மூன்று சிறுவர்கள் அரை நிர்வாணமாக தெருவில், ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டனர்.
அரியானாவில் உள்ள யமுனா நகரில் கர்வான் கிராமத்தில் உள்ள இரும்பு கதவில் இருந்த இரும்பு பொருட்களை சிறுவர்கள் மூன்று பேர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதன் உரிமையாளர் கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி அந்த கிராமத்தில் வசிக்கும் ரத்தன் சிங் என்பவர் கூறும்போது, அந்த சிறுவர்கள் திருடிய இரும்பு பொருட்களை விற்பதற்காக, பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைக்கு, எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பிடித்து பஞ்சாயத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, பஞ்சாயத்தில் சிறுவர்களின் பெற்றோரை அழைத்து வர உத்தரவிடப்பட்டது. அவர்களின் பெற்றோர் வந்ததும் விசாரணை தொடங்கியது. இதில் இரும்பு பொருட்களை திருடியதாக சிறுவர்கள் மூன்று பேரும் ஒப்பு கொண்டனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர், ஆத்திரமடைந்தனர். அதன்பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தக்க தண்டனைஅளிக்க வேண்டும் என்று சிறுவர்களின் பெற்றோர் பஞ்சாயத்தில் கேட்டு கொண்டனர்.
அதன் பிறகு பஞ்சாயத்தில் சிறுவர்கள் மூன்று பேரையும் அரை நிர்வாணமாக தெருவில் இழுத்து செல்லும்படி கூறப்பட்டது. பஞ்சாயத்து, உத்தரவின்படி சிறுவர்களும் கிராமத்தில் உள்ள தெருக்களில் அரைநிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை சிலர் வீடுகளில் இருந்தபடி வீடியோவாக எடுத்தனர். அது சமூக ஊடகங்களில் பரவியதால், காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.