மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை.! மனித மிருகத்திற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடியான தீர்ப்பு!!
கேரளா ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினரின் 5 வயது மகள் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிசிடிவி கேமராவின் மூலம் சிறுமியை அஸ்பக் ஆலம் என்ற 28 வயது நபர் தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அஸ்பக் ஆலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து மேலும் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து குப்பை கிடங்கில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் குப்பை கிடங்கில் சிறுமியின் உடலை மீட்டனர்.
மேலும் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு விசாரணை 100 நாட்களில் முடிக்கப்பட்டு 110 வது நாளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.