திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நெஞ்சை ரணமாக்கும் வீடியோ: வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம் செய்த 18 வயது இளைஞர் - உடல் கருகி பறிபோன உயிர்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா இரயில் நிலையத்திற்கு நேற்று வருகைதந்த இளைஞர் ஒருவர், திடீரென உயரமின்னழுத்த கம்பியின் மீது ஏறி மின்சாரத்தில் கால்கள் வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
பயணிகள் மற்றும் இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் கண்முன் இளைஞர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு உடல் கருகி தண்டவாளத்தில் விழுந்தார். அவரை மீட்ட இரயில்வே காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஞ்ச்கிர் மாவட்டம், சம்பா கிராமத்தை சேர்ந்த ரோஹித் (வயது 18) என்பது தெரியவந்துள்ளது. இவர் வேலை கிடைக்காத மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார்.
Live सुसाइड, अम्बाला रेलवे स्टेशन पर युवक ने किया. pic.twitter.com/j21msAWTci
— ANURAG SINGH (@anuragsinghliv) March 13, 2024
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தேடித்தான் வீட்டிற்கு வருவேன் என புறப்பட்டவர், தற்கொலை செய்வதற்கு முன் மாமாவுக்கு தொடர்பு கொண்டு வேலை எங்கும் கிடைக்கவில்லை என வருந்தி இருக்கிறார். மேலும், ரூ.200 பணமும் கேட்டுள்ளார்.
அவர் பணம் அனுப்பி வைத்த நிலையில், அன்று மாலை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஹித் தற்கொலை செய்துகொள்ளும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.