மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாட்டுக்கறி விற்ற குடும்பத்தின் பெண்கள் பலாத்காரம்.! ஆண்கள் கொலை.. 4 பேர் அராஜகம்.!
ஹரியானா மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்றதாக குறிப்பிடப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை பாலியல் பலாத்காரம் செய்தும் கொலை செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் மரண தண்டனை பிடித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவில் மாட்டிறைச்சி விற்றதாக குறிப்பிடப்பட்ட ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள் குற்றவாளிகள் 4 பேர் நுழைந்து அந்த வீட்டில் இருந்த தம்பதியரை அவர்கள் வீட்டிற்கு முன்புறத்தில் வைத்து அடித்து கொலை செய்தனர்.
அதன்பின் அந்த வீட்டில் இருந்த இளம் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண்களில் ஒருவருக்கு 16 வயதும் மற்றொரு பெண்ணுக்கு 21 வயதும் ஆகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது ஹரியானா மாநில அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது.
இது பற்றி குற்றம் சாட்டப்பட்ட ஹேமத் சௌஹான், வினய், அயன் சவுகான் மற்றும் ஜெய் பகவான் ஆகிய 4 பேருக்கு எதிராக ஹரியானா போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதன் பின் இந்த வழக்கு மாநில அரசிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த குற்றம் மிகவும் கொடூரமானதாக இருப்பதால் இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இரட்டை கொலை மற்றும் 2 பெண்களை கூட்டு பலகாரம் செய்த இந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.