மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்பு கிரிலில் சொருகி பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்; குழந்தையின் பெற்றோரை தேடும் காவல் துறை.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் மாவட்டம், அஜ்ரண்டா பகுதியில் இன்று காலை குடியிருப்பு ஒன்றின் பக்கவாட்டு எல்லை சுவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் கம்பிகளுக்கு நடுவே, பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
குழந்தையின் உடலில் கூர்மையான இரும்பு கம்பிகள் துளைத்து, சிசு பரிதாபமாக உயிரிழந்து இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், புதிதாக பிறந்த குழந்தையின் பெற்றோரை தேடி வருகின்றனர்.
மேலும், குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததா? அல்லது கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிழந்ததா? என்பதை கண்டறிய பிரேத பரிசோதனை அறிக்கை உதவும் என கூறுகின்றனர். மேற்படி சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் விசாரணை நடந்து வருகிறது.