மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.30 இலட்சம் பணத்திற்காக காதலி கொலை; யமுனை ஆற்றிலே தள்ளிவிட்டு பயங்கரம்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியை சேர்ன்ஹட்ட பெண்மணி ரேணு. இவரின் காதலர் தீபக். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று ரேணு மாயமாகினார். அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை அதிகாரிகள் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ரேணுவின் காதலர் தீபக் மீது சந்தேகம் எழுந்தது.
இதனால் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, ரேணு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ.30 இலட்சம் பணம் வைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தீபக் ரூ.30 இலட்சம் பணத்திற்கு ஆசைப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, காதலியை யமுனை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்தவர், ரூ.30 இலட்சம் பணத்தை அபகரித்து இருக்கிறார். விசாரணைக்கு பின்னர் தீபக் மற்றும் அவரின் நண்பர் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.