#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை தேர்வெழுத வைத்த பயங்கரம்; ஆசிரியரின் அலட்சியத்தால் 11 வயது சிறுமி பரிதாப மரணம்.!
File Pic
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியில் வசித்து வரும் சிறுமி ஆராத்யா கண்டேல்வால் (வயது 11). சிறுமி அங்குள்ள தனியர் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று (ஜூலை 12) அன்று சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், உடல்நலக்குறைவால் வாந்தியும் எடுத்துள்ளார். உடனடியாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
மாறாக பள்ளியின் ஆசிரியர் சிறுமியை தேர்வு எழுத வற்புறுத்தி இருக்கிறார். வாந்தி எடுத்த சிறுமி தேர்வு எழுதிவிட்டு, உடற்சோர்வுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் சிறுமியின் உடல்நலம் மோசமாகியுள்ளது.
இதனையடுத்து, சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். உடல்நலம் தேறி வரும் என பெற்றோரும் நம்பி இருக்கின்றனர்.
ஜூலை 14 அதிகாலையில் வாந்தி எடுத்து அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியரின் அலட்சிய செயலாலேயே தனது குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர் குற்றசாட்டை முன்வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.