மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வகுப்பு தோழிகளின் கொடுமையால் தூக்கில் தொங்கிய 14 வயது மாணவர்: நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள கிஷார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 14 வயதுடைய மாணவர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதே பள்ளியில் அவரின் வகுப்பு தோழிகளாக பயின்று வரும் இரண்டு மாணவிகள், மாணவனை கொடுமை செய்து வந்ததாக தெரிய வருகிறது.
இதனால் 14 வயது மாணவன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறான். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் இரண்டு மாணவிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.