மின்துறை அமைச்சர் வீட்டில் நிகழ்ந்த உயிரிழப்பு.. மின்சாரம் பாய்ந்து துடிதுடிக்க சோகம்..! இ.பி பணியாளர்கள் போர்க்கொடி.!



Haryana Power Minister House EB Employee Died Electrical Attack

மின்சாரத்துறை அமைச்சரின் இல்லத்தில் தற்காலிக இ.பி ஊழியர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா. இவர் தனது குடும்பத்துடன் சண்டிகர் நகரில் செக்டர் 3 பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரின் வீட்டில் ஏ.சி-க்கு கனெக்சன் கொடுக்க தற்காலிக மின்வாரிய பணியாளர் சென்றுள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மின்சார தாக்குதலால் பாதிக்கப்படவே, அமைச்சரின் வீட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிருக்கு போராடுவதாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர ஊர்தி சிறிது தாமதமாக நிகழ்விடத்திற்கு வந்ததாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர ஊர்தி ஊழியர்கள், உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பணியாளரின் பெயர் அசோக் பிரதான் என்பது தெரியவந்துள்ளது. இவரின் மறைவு அங்குள்ள மின்வாரிய தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.