மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிகளை ஆசிரமத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
சிறுமிகளை ஆசிரமத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வென்கொஜியில் ஞானானந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஏராளமான சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்த பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக புகார் எழுந்து வந்தது.
அந்த வகையில் ஆசிரமத்தின் நிர்வாகி பூர்ணானந்த சரஸ்வதி ஆதரவற்ற 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி விசாரணை நடத்திய போலீசார் ஆசிரமத்தின் நிர்வாகி பூர்ணானந்த சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.
இதில் ஆசிரமத்தில் இருந்து தப்பிய சிறுமி விஜயவாடாவில் உள்ள போலீசில் புகார் அளித்த பிறகு இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது. இதனையடுத்து சாமியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.