மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புயலால் கொட்டி தீர்க்கும் மழை!. 5 மாவட்டங்களில் பேரிடர் குழுவினர் குவிப்பு!.
வங்கக் கடலில் உருவாகியுள்ள "டில்லி" புயலானது ஒடிசா ஆந்திரவிற்கு இடையே கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது புயலானது வலுவடைந்து, ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. மற்றும் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்துள்ளது. அங்கு புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 5 மாவட்டடங்களில் பேரிடற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.