காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி.! செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.! அதிர்ச்சி சம்பவம்.!
இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. உத்தரப்பிரதேசத்தில் நேற்றைய தினம் மட்டும் 30,000-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும், நோயாளிகளின் உதவிக்காகவும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட லக்னோவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு சில சந்தேகங்கள் கேட்டுள்ளார்.
அப்போது உங்கள் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா என்றும், தனிமைப்படுத்தல் தொடர்பான மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து விபரங்களை பூர்த்தி செய்தி விட்டீர்களா என்று கொரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியர் கேட்டுள்ளார். இதற்க்கு பதிலளித்த சந்தோஷ் சிங், எங்களுக்கு எவரும் இதுபற்றி கூறவில்லை என்றும் மருத்துவர்கள் யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவரது பதிலை கேட்டு ஆத்திரமடைந்த கொரோனா கட்டுப்பாட்டு அறை பெண் ஊழியர், "நீ கல்வியறிவற்ற முட்டாள், போயிட்டு செத்துப் போ" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதுதொடர்பாக சந்தோஷ் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான ஆடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.